பெண் குறியின் உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர்ச்சியுறாதநிலையில் அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன் குறுக்களவு அமையும். குழந்தை பெறும் போது குழந்தையின் தலை வெளியே வரும் அளவுவிரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண்குறி என்னும் வேறுபாடு இதற்கு இல்லை. என்ன தான் சுருங்கிய போதிலும் பெண்குறியின் உட்சுவர் ஆண்குறியைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவு வலிமை இல்லாதது. இந்த வல்லமை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந் துள்ளது. நாயின் பெண் குறியில் இப்படி பூட்டி வைத்துக் கொள்ளும் அமைப்பு உள்ளது. பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறுநீர் கழிகĮ 1;கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் என்று இதனைச் சொல்கின்றனர். பெண் குறியின் ஆழத்தில் நுண்ணிய நரம்பு நுனிகள் இல்லை. எல்லா நுனிகளும் நுழைவாயில் அருகிலேயே உள்ளன. உட் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஆழம் உணர்ச்சியை உணர வல்லது இல்லை. எனவே தான் சிறிய ஆண்குறி பெரிய ஆண்குறி என்ற வேறுபாடு பெண்குறிக்கு இல்லை என்கின்றனர். கருப்பையின் அடிப்பகு ;தி செர்விக்ஸ் எனப் படுகிறது. குறியின் நுழை வாயிலின் வழியே பார்த்தால் செர்விக்ஸ் ஒரு மென்மையான வெளிர் சிவப்புப் பட்டன் போலத்தோற்றமளிக்கும். உடலுறவின் போது இதன் வழியாகத்தான் ஆணிடமிருந்து வெளிப்படும்விந்தணுக்கள் கருப்பையை அடைகின்றன. � ��விர மாதவிடாயின் போது வெளிப்படும் கழிவு ரத்தமும் வெளியே வருவதும் இதன் வழியாகத்தான். கருப்பையில் முட்டைகள் உருவாகி வெளி வரும் நேரத்தில் செர்விக்ஸ் வடிக்கும் நீர் நீர்த்திருக்கும். பிற நேரங்களில் கெட்டியாக இருக்கும். ஒரு வழ வழப்பான திர 016;யை ஏற்படுத்தி செர்விக்ஸ் வாயிலை மூடும் அமைப்பு அது. செர்விக்ஸ் உணர்வலைகள் ஏற்படுவது இல்லை. அதனை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப் படுத்தினாலும் பாலுணர்வு கெடுவது கிடையாது.
கருப்பை (யூட்டரஸ்) ஒரு உள்ளீடற்ற உறுப்பு. ஏழரை செ.மீ. நீளம். 5 செ.மீ.அகலம் இருக்கும். மாதவிடாயின் போது அதன் உள்சுவர் மாறுதல் அடைகிறது. உள் சுவரில் தான் கருவான முட்டை ஒட்டிக 3021; கொண்டிருக்கும். உட்சுவரின் தசைகள் பிரசவக் காலத்தில் குழந்தையை வெளியே தள்ளுவதற்கு உதவுகின்றன. கருத்தரிக்கும் காலத்தில் சுரக்கும் நீர் தான் கருப்பையின் வேலைகளைச்செய்வதற்கு உதவியாக உள்ளன. அடி வயிற்றின் உள்ளே கருப்பை மற்ற உறுப்புக்களின் மீது அழுத்தாமல் தொங்கிய வண்ணம் உள்ளது. சாதாரணமாக கருப்பை பெண்குறிக்கால் வாய்க்கு நேர் கோணத்தில் அமைந்திருக்கிறது. பலோபியன் குழாய்கள் அல்லது முட்டை நாளங்கள் கருப்பையில் தொடங்கி 10 செ.மீ. நீளத்தில் இருபுறமும் புனல் ப 019;ன்ற வடிவத்தில் நீண்டிருக்கும். இந்தக் குழாய்களேஅருகில் உள்ள கருக்கலங்கள் வெளியிடும் முட்டைகளைப் பிடித்து வைத்துக்கொள்கின்றன. ஆணின் விந்தணுக்கள் பெண்குறியின் உள்ளே பீச்சப்பட்டதும் அவற்றுள் ஒன்று முட்டையுடன் சேர்ந்து சினையாக இவை � ��தவியாக இருக்கின்றன. பெண் குழந்தை பிறக்கும் முன்பாகவே அதன் கருப்பையில் எதிர் கால முட்டைகள் உருவாகத் தொடங்கி விடுகின்றன. 60 அல்லது 70 லட்சம் எதிர்கால முட்டைகள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அழுகி வீணாக விடுகின்றன. புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் கருப்பையில் 4 லட்சம் முட்டைகள் இருக்கின்றன. அதன் பிறகு புதிய முட்டைகள் உருவாவதில்லை. போகப்போக அந்தப் பெண் வளர வளர அவற்றுள் ஏராளமானவை அழுக ஆரம்பிக்கின்றன. பெண் பருவம் அடைந்ததும் மாதவிலக்குத் தோன்றுகி� ��து.
0 comments:
Post a Comment